வரும் 11-ம் தேதி முதல்.. பயணிகளுக்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்..!
வரும் 11-ம் தேதி முதல்.. பயணிகளுக்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்..!
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 11-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திருப்பதி - காட்பாடி (வண்டி எண்: 07581) இடையே காலை 10.55 மணிக்கும், மறு மார்க்கமாக காட்பாடி - திருப்பதி (வண்டி எண்: 07582) இடையே இரவு 9.55 மணிக்கும் இயக்கப்பட்ட முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 11-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் - மயிலாடுதுறை (வண்டி எண்: 06691) இடையே மதியம் 2.25 மணிக்கும், மறு மார்க்கமாக மயிலாடுதுறை - விழுப்புரம் (வண்டி எண்: 06690) இடையே காலை 6 மணிக்கும் இயக்கப்பட்ட முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் - புதுச்சேரி (வண்டி எண்: 06737,06799) இடையே அதிகாலை 5.30 மணி மற்றும் மாலை 5.50 மணிக்கும், மறு மார்க்கமாக புதுச்சேரி - விழுப்புரம் (வண்டி எண்: 06738, 06436) இடையே காலை 8.10 மணி மற்றும் இரவு 7.45 மணிக்கும் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வரும் 11-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.