பொதுமக்களுக்கு நற்செய்தி.. முடிவுக்கு வருது மூன்றாவது அலை..!

பொதுமக்களுக்கு நற்செய்தி.. முடிவுக்கு வருது மூன்றாவது அலை..!

Update: 2022-02-28 11:52 GMT

தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 21 மாவட்டங்களில் நேற்று ஒற்றை இலக்கத்தில் பதிவானது.

அத்துடன், ஆறு மாவட்டங்களில் தொற்று பரவல் எதுவும் இல்லை. அதனால், மூன்றாம் அலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் நேற்று 60 ஆயிரத்து 707 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் சென்னையில் 119, கோவையில் 66, செங்கல்பட்டில் 51 என, மாநிலம் முழுவதும் 439 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

அதேநேரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, பெரம்பலூர், தேனி, திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளன.

அத்துடன், 21 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தான் பாதிப்பு உள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் நேற்று 1,209 பேர் குணமடைந்தனர்.

தற்போது, மருத்துவமனைகளில் 6,393 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றால் நேற்று ஒருவர் உட்பட இதுவரை 38 ஆயிரத்து மூன்று பேர் இறந்துள்ளனர்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், மூன்றாம் அலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News