சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. கும்பக்கரையில் குளிக்க அனுமதி..!

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. கும்பக்கரையில் குளிக்க அனுமதி..!

Update: 2022-06-14 15:00 GMT

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் மழை பெய்யும்போது இந்த அருவியில் நீர் வரத்து அதிகமாக இருக்கும்.

அந்த வகையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானல், வெள்ளகவி, அடுக்கம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து சரியான பிறகு சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை தெரிவித்த நிலையில், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Similar News