சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்..!

சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம்..!

Update: 2022-02-23 15:00 GMT

ஷாஜகானின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 3 நாட்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜகானின் 367-வது உர்ஸ் நினைவு தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம்.


அதன்படி, பிப்ரவரி 27, 28-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரையும், மார்ச் 1-ம் தேதி சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரையும் இலவசமாக தாஜ்மஹாலை பார்வையிடலாம்.

அன்றைய தினம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், தாஜ்மஹாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

தாஜ்மஹாலுக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விதிகளை பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஷாஜகானின் பிறந்தநாள், நினைவுநாளையொட்டி இந்த விலக்கு அளிக்கப்படுகிறது. இது தவிர, உலக சுற்றுலா தினத்தன்றும் தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News