ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி சீட் கன்ஃபார்ம்.. புதிய வசதி அறிமுகம்..!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி சீட் கன்ஃபார்ம்.. புதிய வசதி அறிமுகம்..!

Update: 2022-07-02 13:48 GMT

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி, சமீபத்தில் தனது இணையதளத்தில் பல புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. குறிப்பாக, புஷ் நோட்டிபிகேஷன் வசதியைத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம், பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும். ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தால், அது குறித்த அறிவிப்பு பயணிகள் மொபைல் போனுக்கு தகவலாக அனுப்பப்படும்.

பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக, பயணிகள் முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்கு சென்று புஷ் நோட்டிபிகேஷன் வசதியை பெற வேண்டும்.

நீங்கள் முன்பதிவு செய்யும் ரயிலில் ஏதேனும் ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு மொபைலில் ஒரு அறிவிப்பு வரும்.

இந்த SMS செய்தியில் ரயில் எண் பற்றிய தகவல்கள் இருக்கும். அதன் பிறகு நீங்கள் விரும்பினால், இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து உடனடியாக பயணம் செய்யலாம்.

நீங்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தை ஓபன் செய்யும் போது புஷ் நோட்டிபிகேஷன் என்ற விருப்பத்தை பெறுவீர்கள். இந்த சேவை முற்றிலும் இலவசம்.

இதற்காக, ஐஆர்சிடிசி-யின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று பதிவு செய்து, இந்தச் சேவையில் இணைய வேண்டும்.

Similar News