பயனாளிகளுக்கு குட் நியூஸ்.. இனி, ஈசியா சிலிண்டர் பெறலாம்..!
பயனாளிகளுக்கு குட் நியூஸ்.. இனி, ஈசியா சிலிண்டர் பெறலாம்..!
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் குரல் வழியாக டிஜிட்டல் பரிவர்த்தனை செலுத்துவதற்கான திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம், இன்டர்நெட் வசதி அல்லது ஸ்மார்ட்போன் வசதி இல்லாத வாடிக்கையாளர்கள் ஈசியாக பணம் செலுத்தலாம். இதற்காக அல்ட்ரா கேஷ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது.
சாதாரண போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ‘UPI123PAY’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், இன்டர்நெட் இல்லாமல் சாதாரண போன் மூலம் யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில் பாரத் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் UPI123PAY மூலம் ஈசியாக குரல் வழியே பரிவர்த்தனை மேற்கொள்ள பாரத் பெட்ரோலியம் வழிவகை செய்துள்ளது.
இதற்காக, 080-4516-3554 என்ற எண்ணுக்கு பாரத் கேஸ் பயனாளிகள் சாதாரண போனில் இருந்து அழைப்பு விடுக்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை மூலம் உடனடியாக சிலிண்டர் புக் செய்து கட்டணத்தையும் அப்போதே செலுத்திவிடலாம்.
இத்திட்டத்தின் மூலம், பாரத் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் சுமார் 4 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.