பெண்களுக்கு நற்செய்தி.. ரேஷன் கடைகளில் இனி.. மத்திய அரசு சூப்பர் தகவல்..!
பெண்களுக்கு நற்செய்தி.. ரேஷன் கடைகளில் இனி.. மத்திய அரசு சூப்பர் தகவல்..!
வரும் 2024-ம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க அரிசியை விநியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ரேஷன் கடைகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க அரிசியை படிப்படியாக வினியோகிக்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்துக்கு ஆண்டுக்கு 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலவாகும். திட்டம் முழுமையாக 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு வரும் வரை முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட நலத் திட்டங்களின் கீழ் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அமைப்புகள், ஊட்டச்சத்து மிக்க அரிசியை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 88 லட்சம் டன் அரிசியை கொள்முதல் செய்துள்ளது.
பெண்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார் போன்றவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்க்க அரிசியை ஊட்டச்சத்து மிக்கதாக மாற்றி ஒவ்வொரு ஏழைக்கும் வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.
அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க அரிசியை படிப்படியாக விநியோகிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.