தந்தை இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் தவித்த சிறுவர்களுக்கு உதவிய நல் உள்ளங்கள்..!!

தந்தை இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாமல் தவித்த சிறுவர்களுக்கு உதவிய நல் உள்ளங்கள்..!!

Update: 2022-06-13 12:58 GMT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெயசீலன் (46). இவரது மனைவி உமாமகேஸ்வரி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கூலித் தொழிலாளியான இவருக்கு சக்திவேல் (17), ரஞ்சித் (15) ஆகிய மகன்களும், வரலட்சுமி (11) என்ற மகளும் உள்ளனர். சக்திவேல் 12-ம் வகுப்புத் தேர்வும், ரஞ்சித் 10-ம் வகுப்புத் தேர்வும் எழுதியுள்ளனர். வரலட்சுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெயசீலன் திடீரென உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் தந்தையின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்யப் பணம் இல்லாததால் 3 பேரும் தவித்தனர். இதையறிந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்று திரண்டு பணம் வசூல் செய்து ஜெயசீலனின் உடலை அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் தாய்-தந்தையை இழந்த 3 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியானதை அறிந்த ஆரணி தாசில்தார் க.தனபால் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் பத்மநாபன் ஆகியோர் கிராமத்துக்கு வந்தனர்.

அவர்கள் 3 பேரையும் அரசு காப்பகத்தில் தங்க வைத்து படிக்க வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதற்கு உறவினர்களும், கிராம மக்களும் ஒப்புக் கொள்ளவில்லை. கிராமமக்கள் அனைவரும் சேர்ந்து அவர்களை படிக்க வைத்து வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம் என்று கூறினர்.

இதையடுத்து, உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை கொண்டு வாருங்கள். உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம் என கூறி அதிகாரிகள் சென்றனர்.

Similar News