பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட சரக்கு.. வைரல் வீடியோ !

பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட சரக்கு.. வைரல் வீடியோ !

Update: 2022-03-25 12:55 GMT

பக்தர்களுக்கு மதுபானம் பிரசாதமாக வழக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ளது பிரசித்திபெற்ற பாபா ரோட் ஷா கோவில். இந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக மதுபானம் வழங்கப்பட்டது.

அங்குள்ள போமா கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கிய திருவிழா இரண்டு நாள்கள் அதாவது இன்று வரை நடைபெறுகிறது. திருவிழாவின் போது பக்தர்களுக்கு 'பிரசாதமாக' மதுபானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு பிரசாத மதுவை வாங்கி குடித்துவிட்டு வெளியேறினர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

பிரசாதமாக சிலருக்கு பாட்டிலிலும் சிலருக்கு அவர்கள் கொண்டுவந்த டம்ளர்களிலும் மதுபானம் ஊற்றிகொடுக்கப்பட்டது. சிலர் பதிலுக்கு காணிக்கையாக ரூபாய்களை வழங்கினர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 


இந்த கோவிலில் எப்போதும் இந்த திருவிழாவின் போது மதுபானம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது, இது வழக்கமானது என்றும் கூறப்படுகிறது. எனினும் கோவிலில் மதுமானம் பிரசாதமா என்று பலரும் வியந்தும், அதிருப்தி தெரிவித்தும் வருகின்றனர்.
 
newstm.in

 

 

Similar News