பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் அனைத்தும், Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. ஆப்பிள் OS இயங்குதளத்தில் இல்லாத பல அம்சங்கள் பலவற்றை ஆண்ட்ராய்டு கொண்டுள்ளது.

பயனர்களுக்கு எளிதில் விளங்கக்கூடிய வகையில், இதன் பயன்பாடு இருப்பதால், மக்கள் ஆண்ட்ராய்டு நிறுவப்பட்ட ஸ்மார்ட்போன்களையே அதிகம் விரும்பி வாங்குகின்றனர். ஆண்ட்ராய்டு போன்களில் அழைப்புகளை பதிவு செய்வது என்பது மிகவும் எளிதானதாகும். 

ஸ்மார்ட்போனின் கூடவே டையரில் நிறுவப்பட்ட ரெக்காட்டிங் அம்சங்கள் ஆனாலும் சரி, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் அழைப்புகள் மூலம் அழைப்புகளை பதிவு செய்வதாக இருந்தாலும் சரி. ஆண்ட்ராய்டுக்கு நிகர் அது மட்டும் தான் என்றிருந்தது.

ஆனால், பயனர்களில் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கூகுள் புதிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் அதன் Play Store கொள்கைகளை மாற்றி அமைத்திருக்கிறது. மாற்றி அமைக்கப்பட்ட கொள்கை விதிகள் இன்று (மே 11 ) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  

இதற்கிடையில் கூகுள் மூன்றாம் தரப்பு கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு தடை விதிப்பதாக தனது புதிய கொள்கைகளை வகுத்துள்ளது. இதனால், பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து கால் ரெக்கார்டிங் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியாது எனத் தெரியவந்துள்ளது.

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் இதற்கான முன்னணி செயலிகள் அனைத்தும் நீக்கப்படும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை சேகரிக்க சம்பந்த இல்லாத வெளி செயலிகளுக்கு அனுமதி அளிப்பது ஆபத்தானது என கூகுள் கருதுகிறது.

கூகுளின் புதிய ப்ளே ஸ்டோர் கொள்கையின்படி, ரிமோட் கால் ஆடியோ ரெக்கார்டிங்கிற்கான அணுகலை பிற API-க்கள் கோர முடியாது. அதாவது அழைப்புப் பதிவுகளைப் பெற நிறுவப்படாத பயன்பாடுகள் அனுமதிக்கப்படாது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் Truecaller, Automatic Call Recorder, Cube ACR மற்றும் பிற பிரபலமான ஆப்ஸ் வேலை செய்யாது.

இதுவரை, கூகுளின் பிக்சல், சியோமி, சாம்சங் போன்களின் டயலர் பயன்பாடுகளில் இயல்பாகவே அழைப்புகளை பதிவுசெய்யும் அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, உங்களிடம் இந்த ஸ்மார்ட்போன்கள் இருந்தால் பயப்பட தேவையில்லை.

newstm.in