உழவர்களின் நலன்களை பாதுகாக்கும் அரசு திமுக.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

உழவர்களின் நலன்களை பாதுகாக்கும் அரசு திமுக.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

Update: 2022-05-23 13:30 GMT

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது; “தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உழைத்தவர் கலைஞர்.

கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும். குறுவை சாகுபடிக்காக நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம்.


வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை பெருமைப்படுத்தியது திமுக அரசு. விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. உழவர்களின் நலன்களை எப்போது பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது.

இருபோக சாகுபடி பரப்பை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டம். பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,997 கிராமப் பஞ்சாயத்துகளில் 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும்” என்றார்.

Similar News