கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..!!

கோவில்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து..!!

Update: 2022-02-24 18:54 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு அரசு பேருந்து ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பேருந்து இன்று மதியம் வழக்கம் போல் கழுகுமலையில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு கோவில்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேருந்தை லெட்சுமணபெருமாள் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடசலாபுரம் அருகே வந்தபோது மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனால் மூதாட்டி மீது பேருந்து மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்பி உள்ளார்.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் குறைவான பயணிகள் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.

பின்னர் இந்த விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேருந்தில் சிக்கி இருந்த  பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News