40 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து.. பயணிகளுக்கு ஏற்பட்ட கதி !!

40 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து.. பயணிகளுக்கு ஏற்பட்ட கதி !!

Update: 2022-06-26 19:02 GMT

அரசு பேருந்து 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாளக்குடி கிராமம் அமைந்து உள்ளது. இந்த கிராமத்திற்கு புத்தேரி மார்க்கமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் இன்று தாளக்குடி சென்ற அரசு பேருந்து அங்கிருந்து மீண்டும் நாகர்கோவிலுக்கு வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது புத்தேரி பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். 

அவர்களது அலறல் சத்தம்கேட்டு விரைந்துசென்ற அப்பகுதியினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர், நடத்துநர் உள்பட 32 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னர் பேருந்தில் படுகாயங்களுடன் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு, மேலே கொண்டு வந்து ஆசாரிபள்ளம் மற்றும் அந்த பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் கவனக்குறைவா அல்லது வேறுஏதும் காரணமா என விசாரணை நடத்தப்படுகிறது 


newstm.in

Similar News