அரசு ஊழியர் திடீர் மரணம்.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

அரசு ஊழியர் திடீர் மரணம்.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

Update: 2022-06-13 15:45 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (13-ம் தேதி) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புகார் மனுக்கள் கொடுக்க வரும் மக்களிடம் உடனுக்குடன் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அந்த வகையில், படைவீடு பேரூராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்தன் (56) என்பவரும் தனது அலுவலகம் சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மற்ற அதிகாரிகளுடன் அவரும் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அவருக்கு திடீர் என மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த மருத்துவ குழுவினர் மயங்கி விழுந்த ஆனந்தனை பரிசோதனை செய்தததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News