அரசு ஊழியர்களுக்கு தடை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
அரசு ஊழியர்களுக்கு தடை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 48 மணி நேர நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று துவங்கியது.
‘இந்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என அறிவிக்கக் கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ‘தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்பது சேவை விதிகளுக்கு எதிரானது.
அரசு ஊழியர்கள், தொழிலாளர் வரம்பில் வரமாட்டார்கள் என்பதால், அவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உரிமை இல்லை.
வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதிக்கும் அரசாணையை, மாநில அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
அத்துடன், போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் பணிக்கு வராததாக கருதி, அவர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.