அரசு ஊழியர்கள் பதவி உயர்வு.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

அரசு ஊழியர்கள் பதவி உயர்வு.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

Update: 2022-05-18 05:55 GMT

தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக்க வேண்டும் என பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு கோரி சுடலைமாடன், முருகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது. குறிப்பாக, பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

Similar News