அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி மேலும் குறைப்பு !!

அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி மேலும் குறைப்பு !!

Update: 2022-06-04 08:59 GMT

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் வருவங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) கூறியிருப்பதாவது, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. 5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

 
newstm.in

Tags:    

Similar News