தென்னக ரயில்வே திட்டங்களை புறக்கணிக்கும் அரசு.. கனிமொழி பகீர் குற்றச்சாட்டு !!

தென்னக ரயில்வே திட்டங்களை புறக்கணிக்கும் அரசு.. கனிமொழி பகீர் குற்றச்சாட்டு !!

Update: 2022-03-15 16:58 GMT

பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு. வடக்கி வாழ்க்கிறது.. தெற்கே தேய்கிறது, என்று. மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் வடமாநிலங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டு பரவலாக எழுவது உண்டு. அந்த வகையில், தற்போது திமுக எம்.பி. கனிமொழி மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது, மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி கனிமொழி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த ரெயில் பெட்டிகள் நீக்கப்பட்டன.

தென்னிந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட வடக்கு ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தென்னிந்திய ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை வெறும் ரூ.308 கோடி மட்டுமே, எனவும் அவர் மக்களவையில் பேசினார். 

newstm.in

Tags:    

Similar News