மனைவிக்கு அரசு வேலை.. கையை துண்டாக வெட்டி ஒளித்து வைத்த கணவன் !!
மனைவிக்கு அரசு வேலை.. கையை துண்டாக வெட்டி ஒளித்து வைத்த கணவன் !!
அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை கிடைத்தது பிடிக்காமல் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கொடூர கணவர்.
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் ஷரீபுல் - ரேணு காதுன் தம்பதி வசித்து வருகின்றனர். ரேணு காதுன் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரேணுவுக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு பணிஆணை கிடைத்துள்ளது.
ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருந்த ரேணு காதுன் இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால், அரசு வேலை கிடைத்தது கணவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. வேலைக்கு செல்லவேண்டாம் என ஷரீபுல் தனது மனைவி ரேணு காதுனிடம் கூறியுள்ளார். ஆனால் ரேணு காதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்து வேலைக்குச் செல்வேன் என உறுதியாக இருந்து வந்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வேலையில் சேருவது தொடர்பாக மீண்டும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஷரீபுல், தனழ மனைவி உறங்கியது நண்பர்களுடன் சேர்ந்து தலியணையால் அமுக்கி கூர்மையான கத்தியால் மனைவியின் கையை வெட்டியுள்ளார். அதோடுமட்டுமல்லாமல் கை அவருக்கு கிடைக்காது என எண்ணி ஒளித்து வைத்து விட்டார்.
இதனிடையே, வலியால் ரேணுகா காதுன் அலறி துடித்துள்ளார். அவரது சத்தம்கேட்டு அண்டை வீட்டார் மற்றும் அவரது சகோதரரால் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டுடன் அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.அங்கிருந்து அவர் பர்த்வானில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். உடனே மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
புகாரின்பேரில், போலீசார் அவரது கணவர் ஷரிபுல், அவரது பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் தேடத் தொடங்கிய நிலையில், அனைவரும் தலைமறைவாக உள்ளனர். மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
newstm.in