சீனியர் சிட்டிசன்களுக்கு தமிழக அரசின் சூப்பர் திட்டம்!!
சீனியர் சிட்டிசன்களுக்கு தமிழக அரசின் சூப்பர் திட்டம்!!
சீனியர் சிட்டிசன்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வருமானம் குறைந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் ஒரு அட்டகாசமான வாய்ப்பு உள்ளது.
பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைந்துவிட்டது.
இந்நிலையில் சீனியர் சிட்டிசன்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை பயன்படுத்தி அதிக வருமானம் பெறலாம். தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் TNPFC நிறுவனம் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகளை விட மிக அதிக வட்டி வழங்குகிறது.
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் ஃபிக்சட் டெபாசிட்டில் ஒரு சீனியர் சிட்டிசன் 60 மாதங்களுக்கு 50,000 ரூபாய் முதலீடு செய்தால் வட்டியாக 21,250 ரூபாய் கிடைக்கும். 60 மாதங்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வட்டியாக 2.12 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
60 மாதங்களுக்கு 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 21.25 லட்சம் ரூபாய் கிடைக்கும். தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புவோர் https://www.tnpowerfinance.com/tnpfc-web இணையதளத்துக்கு சென்று விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
newstm.in