#BREAKING ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !!
#BREAKING ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக அமைச்சர்கள் திடீர் சந்திப்பு நடத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர்கள் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் முடங்கி கிடப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தனர்.
அதன்பின்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பு இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு காலம் தாழ்த்தாமல் அனுப்பிவைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக கொண்டு இந்த சந்திப்பினை நிகழ்த்தினர்.
ஏற்கெனெவே சில கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், அமைச்சர்கள் நீட் விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநரை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பிலும் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in