உக்ரைன் வாழ் தமிழர்கள் நாடு திரும்ப இந்த உதவி எண்களை அழைக்கலாம் - தமிழ்நாடு அரசு..!!

உக்ரைன் வாழ் தமிழர்கள் நாடு திரும்ப இந்த உதவி எண்களை அழைக்கலாம் - தமிழ்நாடு அரசு..!!

Update: 2022-02-24 19:25 GMT

உக்ரைன் வாழ் தமிழர்கள் நாடு திரும்ப விருப்பினால் 044-28515288, 96000 23645, 99402 56444 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா திட்டமிட்ட ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. விமானங்கள் மூலம் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது ஒன்றிய அரசு.


 
இந்நிலையில், தமிழ்நாடு அரசும் உக்ரைன் வாழ் தமிழர்களை பாதுகாப்பாக தாயகம் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் தனது இணையதளத்தில், உக்ரைன் வாழ் தமிழர்கள் நாடு திரும்ப விருப்பினால் இந்த உதவி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தொலைபேசி / Mobile No : 044-2851 5288

நிகரி / Fax : 044-2859 1135

மின்னஞ்சல் / Email Id : nrtchennai@tn.gov.in / nrtchennai@gmail.com

வலைதளம் / Website : https://nrtamils.tn.gov.in

Facebook : https://www.facebook.com/nrtchennai1038

Twitter : @tamiliansNRT

You Tube : Non Resident Tamils Channel

Tags:    

Similar News