குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.. இது அடுத்த அதிரடி !!

குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.. இது அடுத்த அதிரடி !!

Update: 2022-06-02 13:17 GMT

மத்திய அரசு தரப்பில் இருந்து புதிய தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பல்வேறு அம்சங்கள் ஒருசாரமாக இருப்பதாகவும், குலக்கல்வியை ஊக்குவிப்பதாகவும் கூறி பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், தமிழகத்தில் மாநில அளவிலான கல்விக்கொள்கை வடிவகைப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News