அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யலாம்.. அரசு புதிய அறிவிப்பு
அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யலாம்.. அரசு புதிய அறிவிப்பு
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு இனி பொதுமக்களே நேரடியாக உதவி செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கினாலும் பெரும்பகுதி நிதி, சம்பளத்திற்கு போய்விடுகிறது. இதனால், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி வசதி தேவைப்படுகிறது.
இதற்காக, contribute.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக, அரசு பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமபை்பு வசதிகளை, பொதுமக்களே நேரடியாக உதவி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உள்கட்டமைப்பு வசதி தேவைப்படும் 21 ஆயிரத்து 813 அரசு பள்ளிகளின் பட்டியல் மாவட்ட வாரியாக இணையதளத்தில் தரப்பட்டுள்ளது.
மாவட்டத்தை தேர்வு செய்து, உதவியை எதிர்பார்க்கும் பள்ளியை தேர்வு செய்து பின் குறிப்பிட்ட உள்கட்டமைப்பு பணிகளையும் தேர்வு செய்யலாம் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அரசு பள்ளிகளுக்கு உதவ முன்வருவோர் நேரடியாக அந்த இணையதளம் மூலம் சென்று, தாங்கள் விரும்பும் திட்டங்களை, சீரமைப்புகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம்.
newstm.in