இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - அரசு அறிவிப்பு..!!

இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - அரசு அறிவிப்பு..!!

Update: 2022-07-11 05:00 GMT

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கோவில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர்  விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாகை மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, நாகப்பட்டினம் வட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஜூலை 12-ம் தேதி (செவ்வாய்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் கூறியிருப்பது, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவிலில் பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் எதிர்வரும் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

தேரோட்டத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் நகரம் மற்றும் வட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News