கள்ளக்காதலிக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்!!

கள்ளக்காதலிக்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர்!!

Update: 2022-04-14 09:19 GMT

கடையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கருங்கல், இரணியல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தனியாக கடையில் இருக்கும் பெண்களை குறி வைத்து இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டுவந்தார்.

இதனையடுத்து அந்த நபரை பிடிக்க உதவி ஆய்வாளர் ஜான் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் தனிப்படை போலீசார் கருங்கல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த வாகனத்தை இளைஞர் ஒருவர் ஓட்டி வருவதை கண்டு அந்த வாகனத்தை மடக்கினர்.

விசாரணையில் அந்த இளைஞர் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 28 வயதான ஆன்றோ சுபின் என்பதும் பி. பட்டதாரியான இவர் அழகியமண்டபம் பகுதியில் அக்வேரியம் கடை நடத்தி வந்தது தெரியவந்தது

தனது பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்ட நிலையில் வீட்டை விட்டு வெளியேறி அந்த பெண்ணுடன் வாழ தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கள்ளகாதலி அரசு வேலைக்கு செல்ல நிர்பந்தித்துள்ளார்.

இதற்காக 5 லட்ச ரூபாய் வட்டிக்கு வாங்கி புரோக்கர் ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றியுள்ளார். எனவே வட்டிக்கு வாங்கிய பணத்தை கொடுக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து ஆன்றோ சுபினை கைது செய்த கருங்கல் போலீசார் அவரிடம் இருந்து 30 சவரன் தங்க நகை 1 சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

newstm.in

Similar News