வரும் 24ஆம் தேதி கிராம சபை கூட்டம் – தமிழக அரசு உத்தரவு!!
வரும் 24ஆம் தேதி கிராம சபை கூட்டம் – தமிழக அரசு உத்தரவு!!
வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24ஆம் தேதி) அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
இதன்ஒருபகுதியாக 24.04.2022 அன்று நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து, சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்திடுமாறு பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கவும் உறுதி மொழி எடுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தம்பட்டதற்கான விவரங்களை மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் (meetingonline.gov.in)உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் கிராமசபா கூட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே, வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை 24.4.2022. அன்று நல்ல முறையில் நடைபெற உரிய நடவடிக்கை, எடுத்திடவும் கூட்டம் நடைபெற்றமைக்காண அறிக்கையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளிடமிருந்து பெற்று, இவ்வியக்ககத்திற்கு 30.4.2022-குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in