மூதாட்டி, பேரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. போதை இளைஞரின் அடாவடி

மூதாட்டி, பேரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. போதை இளைஞரின் அடாவடி

Update: 2022-03-19 18:32 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். (23). இவர் எப்போதும் கஞ்சா போதையில் சுற்றித்திரிவதாகவும் அப்பகுதி மக்களிடம் தகராறு செய்துவருவது வாடிக்கை என்றும் கூறுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் யுவராஜ் மீது தொடர்ந்து புகார் கூறி வந்துள்ளனர்.

அதேபகுதியில், செய்யாறு பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார், சுகுணா மற்றும் சுகுணாவின் 75 வயது தாய் நாகம்மாள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். அதாவது செய்யாறை சேர்ந்த அவர்கள் பட்டுநூல் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.

ரஞ்சித்குமார், சுகுணா இருவரும் வேலைக்கு சென்று இருந்த நிலையில், நேற்று யுவராஜ் கஞ்சா போதையில் அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 75 வயது மூதாட்டி நாகம்மாளிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க சென்ற 5 வயது சிறுவன் புவியரசு  மீதும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

பலத்த வெட்டுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் வீட்டில் மிதந்த இருவரையும் பொதுமக்கள் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில், அனுமதித்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனை கொண்டு செல்லப்பட்டனர். இருவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடிய யுவராஜை போலிசார் கைது செய்து, கொலை குறித்த காரணங்களை விசாரணை செய்து வருகிறார்கள்.

 

newstm.in


 

 

Similar News