ரூ.2,000-க்காக மூதாட்டி கொலை.. சிறுவன் வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார் !!
ரூ.2,000-க்காக மூதாட்டி கொலை.. சிறுவன் வாக்குமூலத்தால் அதிர்ந்த போலீசார் !!
ரூ.2 ஆயிரம் பணத்துக்காக மூதாட்டி ஒருவரை சிறுவன் கொலை செய்த சம்பவம் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள வி.அகரம் பகுதியைச் சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரின் மனைவி செல்வபாக்கியம் (68). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி பக்கத்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற செல்வபாக்கியம் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
பின்னர் அவரை உறவினர்கள் வீடு உள்ப பல இடங்களில் குடும்பத்தினர் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து அவரது மகன் பழனிவேல் வளவனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து வளவனூர் போலீசார் நேற்று இரவு சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறவே, சந்தேகம் அடைந்த போலீசார் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, மூதாட்டி செல்வபாக்கியத்தை, கொலை செய்ததை போலீசாரிடம் சிறுவன் ஒப்புக் கொண்டான்.
பின்னர் அருகிலுள்ள வீட்டு கழிப்பறை செப்டிக் டேங்கில் மூதாட்டி செல்வபாக்கியத்தை கொலை செய்து புதைத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து இரவோடு இரவாக போலீசார் கழிப்பறை செப்டிக் டேங்கை அகற்றி பார்த்தபோது அழுகிய நிலையில் இருந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டனர். பின்னர் சிறுவனை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
சிறுவன், சென்னையில் தங்கி ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருறான். கடந்த 3 மாதத்திற்கு முன்பு செல்வபாக்கியத்திடம் ரூ.2 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றதை அவர் கண்டு பிடித்துவிட்டார். என்னிடம் அந்த பணத்தை கேட்டு நச்சரித்தார். பின்னர் சென்னைக்கு சென்று விட்டேன்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தேன். அப்போது அவர் என்னிடம், திருடிய பணத்தை கொடுக்குமாறு கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் மூதாட்டியை கொலை செய்து கழிப்பறை செப்டிக் டேங்கில் புதைத்துவிட்டு சென்றதாக சிறுவன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
newstm.in