நிர்வாண சைக்கோவிடம் 2 நாட்கள் சிக்கிய மூதாட்டி.. மீட்க உதவிய அந்த விளையாட்டு !!

நிர்வாண சைக்கோவிடம் 2 நாட்கள் சிக்கிய மூதாட்டி.. மீட்க உதவிய அந்த விளையாட்டு !!

Update: 2022-02-14 20:29 GMT

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி டெரைஸ் ஹோல்ட். கணவரை இழந்த இவர் தனது மகள் திருமணம் முடித்துக்கொண்டு தனியாக சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். மூதாட்டி டெரைஸ் ஹோல்ட் செல்போனில் அதிகளவில் கேம் விளையாடும் பழக்கம் கொண்டவர். 

குறிப்பாக, தினமும் காலையில் தனது செல்போனில் 'Wordle' கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்த விளையாட்டில் தான் பெறும் மதிப்பெண்ணைத் தனது மகளுக்குத் தினமும் அனுப்பி வைப்பார். 

இந்நிலையில், மூதாட்டி கடந்த 5ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துள்ளார். அவர் முழு நிவாரணமாக வீட்டுக்குள் புகுந்ததை பார்த்து மூதாட்டி டெரைஸ் ஹோல்ட். பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மூதாட்டியை அந்நபர் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து தாயிடமிருந்து 'Wordle' விளையாட்டுக்கான ஸ்கோர் வராததால் அவரது மகள் செல்போனில் அழைத்தார் எடுக்கவில்லை. இதற்கு அடுத்தநாளும் வராததால் சந்தேகமடைந்த அவர் இது குறித்து போலீசாருக்குக தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலீசார் மூதாட்டி வீட்டிற்குச் சென்றபோது கத்தி முனையில் அவர் பிணையக் கைதியாக இருப்பது தெரிந்தது.

உடனே போலீசார் மூதாட்டியைச் சிறைபிடித்து வைத்திருந்த வாலிபர் டேவிஸை கைது செய்து அவரை மீட்டனர். பிணைக்கைதியாக இருந்த மீதாட்டியை மீட்க கேம் உதவியிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


 

Tags:    

Similar News