நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டி.. காரணம் என்ன தெரியுமா..?
நாகப் பாம்புடன் வாழ்ந்த மூதாட்டி.. காரணம் என்ன தெரியுமா..?
கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மானஷா. இவருடைய கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் ஒரு நாகப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்த மானஷா, இறந்துபோன தன் கணவர் மறுபிறவி எடுத்து நாகப் பாம்பாக வந்திருப்பதாக கருதி அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். 4 நாட்களாக அந்த பாம்புடனே அவர் தங்கியும் இருந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அந்தப் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மானஷா, தனது கணவர் தான் பாம்பு உருவில் வந்துள்ளார் எனக் கூறி பாம்பை பிடிக்கக் கூடாது என்றும், வீட்டில் இருந்து வெளியேற்றக் கூடாது என்றும் அவர்களிடம் தகராறு செய்தார்.
இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், மானாஷா வளர்த்துவரும் நாகப்பாம்பு குறித்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.