பெரும் பரபரப்பு.. மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் எண் மூலம் அரசு அதிகாரிகளிடம் மோசடி?
பெரும் பரபரப்பு.. மாவட்ட ஆட்சியர் வாட்ஸ்அப் எண் மூலம் அரசு அதிகாரிகளிடம் மோசடி?
நவீன டிஜிட்டல் என கூறிக்கொண்டு அதன் மூலமே மோசடிகள் அதிகரித்துவிட்டன. சாதாரண எளிய மனிதர்கள் முதல் உயர் அரசு அதிகாரிகள் வரை இந்த மோசடியில் இருந்து தப்பவில்லை. இதில் சிலர் விழித்துக்கொண்டாலும் பலரும் ஏமாந்து பணம், பொருளை இழந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது மாவட்ட ஆட்சியர் பெயரிலேயே அரசு அதிகாரிகளிடம் மோசடியை அரங்கேற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பெயர் மற்றும் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் வைத்து 7061656848 என்ற எண்ணில் இருந்து மாவட்ட அலுவலர்களுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், என்னுடைய புதிய நம்பர் இது, இதில் உள்ள கிஃப்ட் கூப்பன் 10 ஆயிரம், உடனடியாக 10 கார்டு வாங்குங்கள், என மாவட்ட ஆட்சியர் கூறுவது போல் குறுந்தகவல் வந்துள்ளது.
சிலர் வாட்ஸ்அப் குரூப்லேயே விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கும் அந்த மோசடி நபர் பதில் அளித்துள்ளார். சிலருக்கு தனியாக மெசேஜ் அனுப்பியும், மோசடியில் ஈடுபட முயன்றுள்ளார். இதனை சில அதிகாரிகள் கண்டுபிடித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுச்சென்றனர்.
அவர் விளக்கம் கொடுத்த பின்னரே அரசு அதிகாரிகளுக்கு மோசடி வலையில் சிக்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறுகையில், என்னுடைய பெயரில் வாட்ஸ்அப் மெசேஜ் வருவதாக புகார் எழுந்திருக்கிறது. அதனை நம்பி யாரும் ஏமாறவேண்டாம் என அறிவித்துள்ளார். மேலும் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in