பெரும் பரபரப்பு.. உலகின் உயரமான சிலைக்கு அருகில் நிலநடுக்கம் !!
பெரும் பரபரப்பு.. உலகின் உயரமான சிலைக்கு அருகில் நிலநடுக்கம் !!
இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக இப்போது வானுயர உயர்ந்து நிற்கிறது சர்தார் வல்லபாய் படேல் சிலை. இந்த நிலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சிலை நிறுவப்பட்டு உள்ளது.
நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும்வகையில், 'ஒற்றுமை சிலை' என்று இது அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 182 மீட்டர். உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது. இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில் படேல் சிலை அருகே நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தெற்கு குஜராத்தில் உள்ள கெவாடியாவின் தென்கிழக்கே 12 கிமீ தொலைவில் உள்ளது. இது 12.7 கிமீ ஆழத்தில் பதிவானது என நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் அப்பகுதியில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அங்கு சிலை அமைவதற்கு முன்பே பெரும் நிபுணர்கள் மூலம் நிலஅதிர்வு ஏற்படுமா, மண்பரிசோதனை எல்லாம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in