பெரும் பரபரப்பு.. அரசு அலுவலகத்துக்குள் ஊழியர் வெட்டிக்கொலை !!
பெரும் பரபரப்பு.. அரசு அலுவலகத்துக்குள் ஊழியர் வெட்டிக்கொலை !!
அரசு அலுவலகத்துக்குள் புகுந்து பணியாளர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே நாசரேத்தில் மின்பகிர்மான அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் 5 பேர் தினமும் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பணிக்காக மின்பாதை ஆய்வாளரான நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்த ஆனந்த பாண்டி என்பவர் பணியில் இருந்துள்ளார்.
இதையடுத்து பணியில் இருப்பவர்கள் 1 மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த மின் கணக்கீட்டை எடுப்பார்கள். இந்த நிலையில் இன்று காலை பணி மாற்றத்திற்காக வந்த பணியாளர், அலுவலகத்தில் வந்து பார்த்தபோது ஆனந்த பாண்டியன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் நாசரேத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது உயிரிழந்த ஆனந்த பாண்டி உடலில் ஏழு இடங்களில் வெட்டு காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் ஒரு கும்பலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக அவரை வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லப்பட்ட ஆனந்த பாண்டி நேற்றிரவு 12 மணி வரை இந்த மின் கணக்கை எடுத்துள்ளார். அதன் பின்னர் கணக்கு எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரை 12 மணி முதல் 1 மணிக்குள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
newstm.in