பெரும் அதிர்ச்சி! கண்ணாடி பாட்டில்களில் சிசுக்களின் சடலங்கள்!!

பெரும் அதிர்ச்சி! கண்ணாடி பாட்டில்களில் சிசுக்களின் சடலங்கள்!!

Update: 2022-06-26 07:32 GMT

கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் துணிகளை துவைக்க வந்தனர். அப்போது அங்கு நிறைய கண்ணாடி பாட்டில்கல் சிதறி கிடந்தன. துணி துவைக்க வந்த மக்கள் அவற்றை எடுத்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

கீழே கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாட்டில்களை கைப்பற்றி அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். அவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணாடி பாட்டில்கள் எப்படி அங்கு வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News