பெரும் அதிர்ச்சி! தாயால் உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமி!!

பெரும் அதிர்ச்சி! தாயால் உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமி!!

Update: 2022-07-13 18:50 GMT

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் விறகு எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது மயானம் அருகில் சிறுமி அழும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த அவர்கள் பேய் ஒன்று மயானத்தில் அழுதுகொண்டிருக்கிறது என கிராமத்தாரிடம் கூறினர்.

இதைக் கேட்ட கிராமத்தார், ஒன்று சேர்ந்து மயானத்துக்கு வந்துபார்த்தனர். அங்கு தரைக்கு அடியில் இருந்து சிறுமியின் சட்டம் கேட்டது. இதனால் பதறியடித்தபடி தரையை தோண்டினர். அப்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தரையில் சிறுமி ஒருவர் உயிருடன் புதைக்கப்பட்டிருந்ததும், அவர் வாயில் களிமண்ணை வைத்து அடைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில் சிறுமியின் பெயர் லாலி என்று தெரியவந்தது.

அவர் பாட்டி, மற்றும் அம்மா மயானத்துக்கு அழைத்து வந்து வாயில் களிமண்ணை வைத்து குழி தோண்டி உயிரோடு புதைத்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அவரது அம்மா, பாட்டி ஆகியோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News