பெரும் சோகம்.. தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழப்பு !!
பெரும் சோகம்.. தின்னரை குடித்த 10 மாத குழந்தை உயிரிழப்பு !!
பெயிண்டிங் தின்னரை குடித்த 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு கிராமத்தில் அறிவழகன் - பரமேஸ்வரி தம்பதி வசித்து வருகின்றனர். அறிவழகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரியின் தந்தை பவுலின் வீடு பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் உள்ளது. அங்கு நடந்த கோயில் திருவிழாவுக்காக தனது 2 குழந்தைகளுடன் நேற்று தாழநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
பரமேஸ்வரியின் இரண்டாவது மகனா 10 மாத ஆண் குழந்தை கிஸ்வந்த், வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக பெயிண்டிங் வேலைக்குப் பயன்படுத்தப்படும் தின்னரை குடித்துள்ளார். இதனால் சிறுவன் அலறியுள்ளான்.
பின்னர் கவலைக்கிடமான முறையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து பெண்ணாடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை கையில் படும் அளவுக்கா ஆபத்தான பொருட்களை வீட்டில் வைப்பது என போலீசார் கேள்வி எழுப்பியதோடு அப்பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
newstm.in