பெரும் சோகம்.. புளிய மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி !!
பெரும் சோகம்.. புளிய மரத்தில் கார் மோதி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி !!
புளிய மரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் ஒரு சிறுமி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், info-tech ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகேயன், அவரது மனைவி லட்சுமி பிரியா, தாய் மஞ்சுளா, குழந்தைகள் மித்ரா, யாஷினி ஆகிய 5 பேரும் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளனர்.
அங்கு சென்று குடும்பத்துடன் சுற்றிபார்த்துவிட்டு, கோவிலுக்கும் சென்றுவிட்டு சென்னை திரும்ப முடிவுசெய்தனர். அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து இன்று கிளம்பிய அவர்கள் சென்னைக்கு காரில் வந்துகொண்டிருந்தனர். அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் என்ற இடத்தில் வரும்போது சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தில் கார் பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. பயங்கர சத்தம்கேட்டு அப்பகுதியினர் ஓடிச்சென்று பார்த்தனர்.
இதில் கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி லட்சுமி பிரியா, தாய் மஞ்சுளா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு சிறுமிகளும் காயத்துடன் மீட்கப்பட்டனர்.
இதில், இளைய மகள் யாஷினி படுகாயத்துடன் மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் பெரிய மகள் மித்ராவுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்து சிறுமி தனியாக இருக்கும் நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in