பெரும் சோகம்.. உறங்கிய 7 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..
பெரும் சோகம்.. உறங்கிய 7 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..
வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் குடிசை தீப் பற்றி எரிவதை அறிந்து அலரியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் தீ வேகமாக பரவி குடியிருப்பு பகுதியில் இருந்த சுமார் 30 குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு கடும் போராட்டத்துக்கு பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வர கடுமையாக போராடினர். சுமார் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதிகாலையில் சுமார் 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே நடத்தப்பட்ட மீட்புப் பணியில், தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீக்கு இரையாகின. இதனால் உடைமைகள், ஆவணங்களை இழந்து அம்மக்கள் தவித்துள்ளனர்.
இந்நிலையில், தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, காலையிலேயே சோகமான செய்தியைக் கேட்டேன். மக்களை நேரில் சந்திப்பேன், என அவர் குறிப்பிட்டிருந்தார்.
newstm.in