பெரும் சோகம்.. பானிபூரி குருமாவில் தவறிவிழுந்து குழந்தை உயிரிழப்பு !!

பெரும் சோகம்.. பானிபூரி குருமாவில் தவறிவிழுந்து குழந்தை உயிரிழப்பு !!

Update: 2022-04-04 21:19 GMT

சூடாக இருந்த பானிபூரி குருமாவில், 2 வயது ஆண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் முருகேசன் - அனுஷியா தம்பதி வசித்து வருகின்றனர். முருகேசன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷியா (28), தங்கள் வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார், இவர்களுக்கு ரிஷி (2) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி மாலை பானி பூரிக்கு குருமா குழம்பு தயார் செய்த பாத்திரத்தை கீழே வைத்திருந்தார். அப்போது, அதில் குழந்தை ரிஷி தவறி விழுந்ததில் படுகாயந்தது. இதனால் பதறிபோன குடும்பத்தினர் குழந்தையை மீட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை ரிஷி சிகிச்சை பலன் இன்றி  பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இச்சம்பவம் குறித்து, திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூடாக இருந்த பானிபூரி குருமாவில், 2 வயது ஆண் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Similar News