பெரும் சோகம்.. தவறுதலாக எலி பேஸ்ட் சாப்பிட்ட குழந்தை பலி !!

பெரும் சோகம்.. தவறுதலாக எலி பேஸ்ட் சாப்பிட்ட குழந்தை பலி !!

Update: 2022-07-24 13:31 GMT

தம்மம்பட்டி அருகே எலி பேஸ்ட்டை சாப்பிட்ட குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே மண்மலைபாலக்காடு முயல்கரட்டைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (34). இவர் தம்மம்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்து வருகிறார். இவரது 3 வயது குழந்தை வேம்பரசி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தாய் உள்பட யாரும் கவனிக்காத நேரத்தில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை, டூத் பேஸ்ட் என நினைத்து குழந்தை சாப்பிட்டுள்ளார். 

பின்னர் சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர். இந்த சம்பவம் கடந்த 19 ஆம் தேதி நடந்துள்ளது.

அதன்படி, உடனடியாக குழந்தை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை பலியானது. இதுகுறித்து, தம்மம்பட்டி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

 எலி பேஸ்ட்டை சாப்பிட்ட குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 


newstm.in

Similar News