பெரும் சோகம்.. இயக்குநர் ஏ.எல். விஜயின் தாயார் காலமானார் !!
பெரும் சோகம்.. இயக்குநர் ஏ.எல். விஜயின் தாயார் காலமானார் !!
பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.எல். விஜய் தாயார் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ. எல். விஜய் கடந்த 2007ஆம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார்.
இவர் தலைவா படத்தின் போது நடிகை அமலா பாலுடன் காதல் ஏற்பட்டு, 2014 ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு துருவா விஜய் என்ற மகனும் உண்டு.
ஏ. எல். விஜயின் தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். ஏ. எல். விஜயின் தாயார் வள்ளியம்மை. இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in