பெரும் சோகம்.. அரசு பஸ் - கார் மோதல்.. 5 மாணவர்கள் பலி..!
பெரும் சோகம்.. அரசு பஸ் - கார் மோதல்.. 5 மாணவர்கள் பலி..!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகா, சங்கேனஹள்ளி கிராமம் அருகில் கர்நாடக மாநில அரசு பஸ்சும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில், பஸ்சுக்கு அடியில் கார் சிக்கி கொண்டது.
சிக்மகளூரை நோக்கி பஸ்சும், ஹாசனை நோக்கி காரும் சென்று கொண்டிருந்தது. மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்ட கார், பஸ் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இதில் காரில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி இறந்தனர். அனைவரும் பேலூர் வித்யா விகாஸ் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
தகவலறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சில் இருந்த 20-க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா அருகே, மூன்று நாட்களுக்கு முன் தனியார் பஸ் கவிழ்ந்து ஆறு பேர் பலியான சோகம் மறைவதற்குள் அடுத்த கோர சம்பவம் நடந்துள்ளது.