பெரும் சோகம்.. லாரி - டிராக்டர் மோதல்.. 5 பேர் பலி: 17 பேர் படுகாயம்..!

பெரும் சோகம்.. லாரி - டிராக்டர் மோதல்.. 5 பேர் பலி: 17 பேர் படுகாயம்..!

Update: 2022-03-16 12:20 GMT

சத்தீஸ்கர் மாநிலம், மஜ்ரகட்டா கிராமத்தைச்  சேர்ந்த சுமார் 25 பேர், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மற்றொருஊருக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரியாபந்த் மாவட்டம் ஜோபா கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது, டிராக்டர் மீது லாரி மோதியது. இதில், டிராக்டரில் பயணித்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர்; 17 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காரியாபந்த் மாவட்ட காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத படிசோதனைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News