பெரும் சோகம்.. ஒத்த ஓட்டு கூட பெறாத மநீம வேட்பாளர்..!

பெரும் சோகம்.. ஒத்த ஓட்டு கூட பெறாத மநீம வேட்பாளர்..!

Update: 2022-02-22 14:03 GMT

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

சிவகங்கை நகராட்சிக்கான தேர்தலில் மொத்தமுள்ள 27 இடங்களில் திமுக 11 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக 5 இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதில், சிவகங்கை 1-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மகேஷ்குமார் 434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

வேட்பாளர் செங்கோல் ஓட்டு மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஓட்டு கூட அவருக்கு பதிவாகாமல் இருந்தது மிகப்பெரிய அதிசயம் தான் என்று அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News