பெரும் சோகம்.. மிஸ் அழகி பட்டம் பெற்ற இளம்பெண் கார் விபத்தில் மரணம் !!
பெரும் சோகம்.. மிஸ் அழகி பட்டம் பெற்ற இளம்பெண் கார் விபத்தில் மரணம் !!
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் பெயரில் ஆண்டுதோறும் ‘மிஸ் அலபாமா பார் அமெரிக்கா ஸ்டாங்’ என்ற பெயரில் அழகி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கணவர் இன்றி அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களுக்காக இந்த அழகி போட்டி நடத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஷொஇ சோஹொ பெத்தெல் (27 ) என்ற பெண் வெற்றிபெற்றார்.
இதன் மூலம் பெத்தெல் ‘மிஸ் அலபாமா’ என்ற அழகி பட்டத்தை வென்றார். இதற்கிடையில், பெத்தெல் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மியாமி நகரில் கடந்த 10ஆம் தேதி நடந்த விபத்தில் விப்பிள பெத்தெலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பெத்தெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பெத்தெல் கோமா நிலைக்கு சென்றார்.
கோமா நிலைக்கு சென்ற பெத்தெல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கடந்த 18ஆம் தேதி உயிரிழந்ததாக பெத்தெலின் குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர். மிஸ் அலபாமா பட்டம் வென்ற பெத்தெல் உயிரிழந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in