பெரும் சோகம்.. பஞ்சாயத்து தலைவி தீக்குளித்து தற்கொலை !!

பெரும் சோகம்.. பஞ்சாயத்து தலைவி தீக்குளித்து தற்கொலை !!

Update: 2022-04-10 08:48 GMT

பஞ்சாயத்து முன்னாள் தலைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவி ஜாண் புளோரா (58) இருந்துள்ளார். இவருடைய கணவர் ஜெபமாலை. ஜாண் புளோரா - ஜெபமாலை தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. ஜெபமாலை பக்கவாத நோயால் கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வருகிறார். 

குழந்தையும் இல்லை, கணவரும் படுத்த படுக்கையாக இருப்பதை எண்ணி ஜாண் புளோரா மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலையில் வீட்டில் இருந்த ஜாண் புளாரோ திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் வலியால் அவர் அலறி துடித்தார். 

தீ பற்றி எரிந்ததால் ஜாண் புரோளா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜாண் புளோராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பஞ்சாயத்து முன்னாள் தலைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News