பெரும் சோகம்.. வீட்டிலிருந்து வெளியேறிய பேராசிரியர் சடலமாக மீட்பு !!

பெரும் சோகம்.. வீட்டிலிருந்து வெளியேறிய பேராசிரியர் சடலமாக மீட்பு !!

Update: 2022-06-05 08:51 GMT

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் நிதிஷ் (28), பாலிடெக்கனிக்கல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். நிதிஷ் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நிதிஷ் பெற்றோரிடம் சண்டையிட்டுவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் வெளியிலேயே தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

நிதிஷ் வீட்டிற்கும் செல்லாததால், செல்போனும் எடுக்காததால் அவரை பெற்றோர் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடி வந்தனர், எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அருகே பேண்ட் சர்ட் ஷூ அணிந்த நிலையில் ஆண் உடல் மிதந்ததை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை மீட்டு கரைசேர்த்த போது அந்த உடல் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன நிதிஷ் உடல் என்பது தெரியவந்தது. உடனே பெற்றோரை வரவழைத்து அடையாளம் காணப்பட்டது. இதில் உயிரிழந்து காணப்பட்டது நிதிஷ் தான் என்பது உறுதியானது.

அப்போது குடும்பத்தினர் கதறிஅழுத நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, நிதிஷ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து வெளியேறிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

Similar News