பெரும் சோகம்.. ஆளும்கட்சி எம்எல்ஏ திடீர் மரணம் !!
பெரும் சோகம்.. ஆளும்கட்சி எம்எல்ஏ திடீர் மரணம் !!
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமல்லாது திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்பட பல்வேறு மாநில கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவில் ஆட்சி செய்யும் சிவசேனா மத்திய அரசுக்கு கடும் சவாலாக உள்ளது. இந்த நிலையில், அங்கு சிவசேனா எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் லத்கே. அவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல முற்பட்டப்போதே அவர் காலமானார். இதனையடுத்து அவருக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அமைச்சர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தலில் அந்தேரி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் சுரேஷ் ஷெட்டியை வீழ்த்தினார்.
இதன்பின்னர் 2019ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான எம். பட்டேல் என்பவரை தோற்கடித்து எம்.எல்.ஏ.வானார்.
newstm.in