பெரும் சோகம்.. ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு !!

பெரும் சோகம்.. ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு !!

Update: 2022-05-02 09:30 GMT

உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்தார். மேலும் 14 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் செருவத்தூரில் உள்ள துரித உணவகம் ஒன்றில் பள்ளி மாணவ, மாணவிகள் குழுவாக சென்று ஷவர்மா வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்ட பின்னர் சுமார் 15 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள். ஷவர்மா சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னர் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஷவர்மாதான் அவர்களுக்கு ஃபுட் பாய்சனாக மாறியது தெரியவந்தது. இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றுமொரு மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
முதற்கட்ட தகவல்களின்படி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.இறந்த மாணவி செருவத்தூரில் உள்ள சமூக நல மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
 


சிகிச்சை பெற்று வரும் 14 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்துக்கு சென்று மாதிரிகளை சேகரித்தனர். இதையடுத்து உணவகத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News